மத்தளை விமானநிலையத்தின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு !

மத்தளை விமானநிலையத்தின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு !எவ்வித இலாபமும் இன்றி நஷ்டத்தில் நடத்திச் செல்லப்படும் மத்தளை சர்வதேச விமானநிலையம் கூட்டு வியாபாரமான நடத்திச் செல்வதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமா நிலையத்தில் வணிக விமான சேவை, விமான சேவை பராமரிப்பு, பழுது பார்த்தல், முகாமைத்துவம், பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி போன்ற பிரிவுகள் இதன்போது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.  


இவ் ஆலோசனை தொடர்பில் ஆய்வு செய்வது குறித்து சிரேஷ்ட அமைச்சின் செயலாளர்கள் பலர் அடங்கிய குழு நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்தளை விமான நிலையம் 2016 டிசம் 31 வரை 112.9  மில்லியன் அமெரிக்க டொலர் (ரூபா 15,600 மில்லியன்) நஷ்டம். 


இவ்விமான நிலையம் அரச-தனியார் கூட்டு வியாபாரத்தின் கீழ் பாரியளவிலான இலாம் ஈட்டக்கூடிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top