மஹிந்த குடும்பத்துடன் FCID பிரிவில்!

முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்‌ஷ குற்ற புலனாய்வு விசாரணை பிரிவிலும் (CID), அவரது மகன் யோஷித ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிலும் (FCID)  சற்று முன் (15) ஆஜராகியுள்ளனர். 

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைக்காக ஷிரந்தியும், சீனாவின் உதவியுடன் ஏவப்பட்ட சுப்ரீம் செட் - 1 செயற்கைக் கோள் தொடர்பிலான விசாரணைக்காக யோஷிதவும் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆட்சியின்போது செஞ்சிலுவை சங்கத்தால் சிரிலிய அமைப்பிற்கு வழங்கப்பட்ட டிபென்டர் வாகனத்தின் வர்ணத்தை மாற்றியமைத்து யோஷிதவின் பயன்பாட்டுக்கு வழங்கியமை தொடர்பில் ஷிரந்தி ராஜபக்‌ஷவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த டிபென்டர் வாகனம், ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த விசாரணை தொடர்பில் கடந்த ஜூலை 27ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்‌ஷவும், ஜூலை 28 ஆம் திகதி யோஷித ராஜபக்‌ஷவும் CID யிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

ஆயினும், சுகவீனம் காரணமாக தங்களுக்கு வேறொரு தினத்தை வழங்குமாறு அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த விசாரணை தொடர்பில் யோஷித ராஜபக்‌ஷ நாளைய தினம் (16) CID யில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்‌ஷ, கடந்த அரசாங்க காலத்தில், சீனாவின் உதவியுடன் ரூபா 320 மில்லியன் (ரூபா 32 கோடி) செலவில் ஏவப்பட்ட சுப்ரீம் செட்-1 எனும் செயற்கைக் கோள் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்க அவர் தற்போது (15) FCID யில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top