புதிய வெளிநாட்டு அமைச்சர் திலக் மாறப்பன

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமாவின் பின்னர் வெற்றிடமா இருந்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் இடத்திற்கு திலக் மாறப்பன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேண முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

ஜனாதிபதியின் சட்டத்தரணியான திலக் மாறப்பன முன்னாள் நீதவானாவார். 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக செயல்பட்ட திலக் மாறப்பன 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்தின் சட்டமும் ஒழுங்கும் அமைச்சராக செயல்பட்டு வந்தார். அதன் போது எவன்கார்ட் நிறுவனம் குறித்த வழக்கு விசாரனை காரணமாக 2015ம் ஆண்டு நொவம்பர் மாதத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் 2017ம் ஆண்டு மே மாதத்தில் அமைச்சரவையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.ஜனாதிபதியின் சட்டத்தரணியான திலக் மாறப்பன முன்னாள் நீதவானாவார். 2001ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக செயல்பட்ட திலக் மாறப்பன 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்தின் சட்டமும் ஒழுங்கும் அமைச்சராக செயல்பட்டு வந்தார். அதன் போது எவன்கார்ட் நிறுவனம் குறித்த வழக்கு விசாரனை காரணமாக 2015ம் ஆண்டு நொவம்பர் மாதத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் 2017ம் ஆண்டு மே மாதத்தில் அமைச்சரவையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

திலக் மாறப்பனவின் இந்நியமனம் முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வேண்டுகோளுக்கமைய இடம்பெற்றதாகவும் அமைச்சர் ரவி கரணாநாயக்கவின் கீழ் இயங்கிய அனைத்து நிறுவனங்களும் திலக் மாறப்பனவிற்கு வழங்கப்பட்டதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் செய்தி குறிப்பிடுகின்றது.

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top