புதிய கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னையா நியமனம் !


கடற்படையின் புதிய தளபதியாக ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. நேற்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது. 


சின்னையா கடற்படையில் சிரேஷ்ட அதிகாரிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவர். இவருக்கு முன் இருந்த இரண்டு அதிகாரிகளுக்கும் கடந்த ஆட்சி காலத்தில் கொழும்பில் தமிழ் இணைஞர்கள் காணாமல் ஆக்கிய சம்பத்தில் குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


2011ம் ஆண்டு அதாவது கடந்த ஆட்சி காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக இவருக்கு இராணுவ சேவையிலிருந்து விலக நேரிட்டதுடன் சின்னையா ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டவர். எவ்வாறாயினும் நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு மீண்டும் சேவையில் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததுடன் கிழக்கு மாகாண தளபதியாகவும் செயல்பட்டுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top