132 அரசியல் கைதிகள் வழக்கு இன்றி சிறைச்சாலையில் !

இனவாத தேவையின் அடிப்படையில் செயல்படுவதன் காரணமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்தற்கு தற்போதைய அரசாங்கம் தயங்கி நிற்கின்றது என நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா எம்.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அநுராதபுற சிறைச்சாலையில் மூன்று சிறைக்கைதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதம் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.  


தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் இனவாத செயல்பாடுகளுக்கு இடமில்லை என தெரிவித்திருந்தும் அரசியல் கைதிகளின் விடுதலைகுறித்து ஏன் தீர்மானம் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வாறாயினும் தீவிரவாதத்தை தடுக்கும் சட்டத்தை நீக்கி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 132 அரசியல் கைதிகள் வழக்கு விசாரனை இன்றி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் அனைத்து அரசியல் சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என தெரவித்திருந்ததுடன் அவர்கள் தவறிழைக்கவில்லை எனில் பொதுமன்னிப்பு தேவையில்லை என்பதுடன் அவர்களை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top