பாரிய மோசடி, விசாரனை ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் நீடிப்பு !


பாரிய மோசடி, ஊழல் விசாரனை ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவ் ஆணைக்குழுவிக் உத்தியோகபூர்வ காலம் கடந்த மூன்று நாட்களில் முடிவடைந்ததுடன் உத்தியோகபூர்வ காலம் நீடிக்க வேண்டுமென ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. அதற்கமைய இன்று முதல் ஜனாதிபதியின் கோரிக்கைக்கமைய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வகாலம் நீடிக்கப்பட்டும் என நம்பப்படுகின்றது. 


எவ்வாறாயினும் அக்கோரிக்கைக்கமைய நடைமுறையிலுள்ள ஆணைக்குவின் உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்திருந்தாலும் இதுவரை நடவடிக்கைகள் சாதாரணமாக இடம்பெறுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது. பாரிய மோசடி, ஊழல் விசாரணை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


இதுவரை விசாரனை நடவடிக்கைகள் முடிவடைந்து 17 புகார்கள் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரனை செய்வதற்காக பாரிய மோசடி, ஊழல் விசாரனை ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு உருவாக்கப்பட்டதுடன் அதில் 2000 அதிகமான புகார்கள் உள்ளடக்கபட்டுள்ளது.  அப்புகார்களில் பாரிய மோசடி, ஊழலாக தேர்ந்தெடுக்கப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்படும். 


அவ்விசாரனை இடையே மேலும் 17 புகார் குறித்த விசாரனைகள் முடிவடைந்ததுடன் அதன் விசாரனை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ் அறிக்கைக்கு மெலதிகமாக மேலும் இரண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவ்விசாரனையை முடிக்க மேலும் ஆறு மாதங்கள் ஜனாதிபதியிடம் ஆணைக்குழு கோரியுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top