அவசர அமைச்சரவை கூட்டம் !


அமைச்சரவையின் அவசர கூட்டம் இன்று (06) நண்பகல் இடம்பெற்றதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. உள்ளுராட்சிசபை தேர்தலுக்கு குறிப்பிட்ட மூன்று சட்டமூலம் நிறைவேற்றிக் கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசரமாக கூட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அமைச்சரவை கூட்டம் நேற்று போயா தினம் என்பதனால் இடம்பெறாது என கடந்த அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவிக்கும் போது ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேணாரத்ன தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் நேற்று அனைத்து அமைச்சர்களுக்கு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் அவசர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேசசபை திருத்தப்பட்ட கட்டளை சட்டம் மூன்று இன்று அமைச்சரவையில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதன் பின் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டவுள்ளதுடன் அடுத்த வாரம் அவை பாராளுமன்ற அனுமதிக்காகவும் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


உள்ளுராட்சிசபை தேர்தல் திருத்த சட்டமூலம் கடந்த நாட்களில் நிறைவேற்றப்பட்டதுடன் அதற்கமைய உள்ளுராட்சிசபை தேர்தல் நடாத்துவதற்கு மேலும் மூன்று  சட்டமூலம் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குவிற்கு அறிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top