பொன்சேகாவின் கருத்து கட்சியின் கருத்தல்ல !

ஜே.ஆர்.இன் அன்றைய அரசியலமைப்பு இன்று பொருத்தமற்றது என ஐதேக பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் நேற்று (06) சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அதற்கமைய ஜனாதிபதி முறைமை மாற்றமடைய வேண்டும் என எமது கட்சி தற்பொழுது நம்புவதோடு வரம்பற்ற ஜனாதிபதி அதிகாரங்கள் காரணமாக நாடு என்ற ரீதியில் கஷ்டப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அம்மாற்றம் குறித்து பேசுவதற்கு ஐதேக அச்சமடைவதில்லை எனவும் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். அன்று ஐதேக கொண்டு வந்த வேலைத்திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்த்தாலும் இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு சக்தியாக இருப்பது ஐதேக வேலைத்திட்டம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கிடையில் முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய குறித்து அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து ஐதேகவின் உத்தியோகபூர்வ கருத்து இல்லை எனவும் அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்குமுகமாக தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top