200 வது நாளை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினா்களின் போராட்டம் !

ளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (07)  200வது நளை தொட்டுள்ளது.  எனினும் தீர்வுகள் எதுவுமின்றி போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. 


கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 


பல அரசியல்வாதிகள் சென்று வாக்குறுதிகளை வழங்கியுள்ள போதிலும் அவை நிறைவேற்றப்படாமல் இரவு பகலாக போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top