2020ன் பின்னர் தேசிய அரசாங்கம் தேவையில்லை !

தேசிய அரசாங்கத்தின் நோக்கம் 2020ம் ஆண்டளவில் நிறைவடையும் என்பதனால் அதன் பின்னர் தொடர்ந்தும் கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கு தேவையில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (07) ஸ்ரீலசுக தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இருப்பினும் 2025 வரை ஸ்ரீலசுக இணைந்து ஆட்சிய செய்ய ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பார்ப்பதாக கடந்த நாட்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்திருந்தார்.


இருப்பினும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் கருத்து குறித்து மகிழ்ச்சியடைந்திருந்தாலும் கட்சி என்ற ரீதியில் தனித்து ஆட்சியமைக்கவே அவர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் காலங்களில் கை சின்னத்திலோ வெற்றிலை சின்னத்திலோ தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவித்துள்ளார். 


தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான காரணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top