லலித் - பெல்பிட சிறைச்சாலை வைத்தியசாலையில் !


பொது மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றவாளிகளான முன்னாள் ஜயாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்  முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


இவர்கள் இருவரும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதனால் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. 


தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் ரூபா 600 மில்லியன் பணம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் நேற்று கொழும்பு மேல் மீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க தீர்ப்பு வழங்கியதன் பின் அவர்கள் இருவரும் மூன்று வருடம் விகிதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top