ஸ்ரீலசுக அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறமாட்டார்கள் என உறுதி !


நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிலர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைவதற்கு தீர்மானித்திருப்பதாக கடந்த நாட்களில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் வெளிவந்திருந்தன. எவ்வாறாயினும் எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டோம் என அந்த அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.


எப்போதும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டோம் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் தேர்தலின் போது ஸ்ரீலசுகயின் வெற்றிக்காக அனைத்து ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுப்பதாக அவர் ஜனாதிபதியிடம் உறுயளித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவிற்கு எதிராக கடந்த நாட்களில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறவிருந்த அமைச்சர்கள் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளனர். இத்தீர்பின் பின்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த அவ் அமைச்சர்கள் இது குறித்து கலந்துரையாடியுள்ளதுடன் தாங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இது உகந்த சந்தர்ப்பம் அல்ல என தீர்மானித்துள்ளனர்.


கடந்த நாட்களில் அரசாங்கத்தில் இருப்பதனால் எவ்வித பலனும் இல்லை என பகிரங்கமாக தெரிவித்த ஸ்ரீலசுக அமைச்சர்கள் எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்திற்காக முன்நிற்பதாக தெரிவித்திருப்பதுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. இந்நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் இதுதான்.
இதற்கிடையில் எதிர்வரும் நாட்களில் கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடி குறித்து மேலும் சிலருக்கு எதிராக தீரப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மத்தியில் முன்னாள் விளையாட்டுதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் உள்ளார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top