பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம் வெளிச்சத்திற்கு !


தற்பொழுது சொத்து மதிப்புகளை தெரிவித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சொத்து மதிப்புகளை பெற்றுக் கொடுக்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் சொத்து மதிப்புகளை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சொத்துமதிப்புகளை தெரிவிப்பது குறித்து ஊடகங்கள் வாயிலாக போலியான தகவல்கள் வெளியிடுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். உண்மையானதா அல்லது போலியானதா என வெயிடுவது ஊடகங்களின் பொறுப்பு எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


இதுவரை ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மதிப்புகளை வெளிப்படுத்தியதுடன் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை பெற்றுக் கொடுப்பது குறித்து பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மட்டுமின்றி ஊடக நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களையும் விசாரனை கோர வேண்டும் என இதன் போது கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top