ஷிரந்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் !


முன்னாள் ஜனாதிபதி, குருநாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (09) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். 'சிறிலிய சவிய' அமைப்பின் கொடுக்கல் வாங்கல் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குவினரால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஷிரந்தி ராஜபக்ஷவினால் நடாத்திச் செல்லப்பட்ட 'சிறிலிய சவிய' அமைப்பின் கணக்கு குறித்து கடந்த காலங்களில் பல தகவல்கள் வெளிவந்ததுடன் இது குறித்து விசாரனை செய்வதற்காகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கடந்த நாட்களில் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top