பழைய LTTE முகாமில் எரிபொருள் தாங்கி கண்டெடுப்பு !

கிளிநொச்சி, கல்மடுநகர் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில், புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமான எரிபொருள் தாங்கியொன்றை கிளிநொச்சி விமானப்படை கண்டெடுத்துள்ளதாக  தெரிவித்துள்ளது. 

கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, அந்தக் காட்டுப்பகுதியில் சோதனை நடத்தி, மேற்படி எரிபொருள் தாங்கியை மீட்டுள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.  

 புதைத்து வைக்கப்பட்டிருந்த அந்தத் தாங்கி, தோண்டியெடுக்கப்பட்டதுடன், யுத்தக்காலத்தில் அப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாகவும்  அந்தத் தாங்கியில், 30,000 லீற்றர் எரிபொருளை சேமித்துவைத்துகொள்ள முடியும் எனவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை, அந்த தாங்கி புதைக்கப்பட்டிருந்த பகுதியில், ஏனைய ஆயுதங்கள் ஏதும் புதைக்கப்பட்டிருக்கின்றதா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் விமானப்படை மேலும் தெரிவித்தது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top