பூஜிதவின் கீழ் புதிய புலனாய்வு பிரிவு !


பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தவின் கீழ் நேரடியா செயல்படும் புதிய புலனாய்வு பிரிவினை உருவாக்குவதற்ககு திட்டமிடப்பட்டுள்ளது.


பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய இந்த புதிய புலனாய்வு பிரிவு உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது குறித்து அனைத்து பொலிஸ் உதிகாரம் உள்ள பிரதேசங்களிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் ஐந்து பேரை இணைத்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


இப்பொலிஸ் அதிகாரிகள் தேர்வு பொலிஸ்மா அதிபரின் நேரடி தலையீட்டில் இடம்பெறும் எனவும், அதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.


தற்பொழுது அரச புலனாய்வு பிரிவு, பொலிஸ் விசேட விசாரனை பிரிவு உட்பட பல பரிவுகள் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் திணைக்களத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் இவ்வாறு புதிய பிரிவினை உருவாக்குவதற்கான காரணம் என்ன என்பது பற்றி பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கூட தெளிவுபடுத்தவில்லை எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top