2020ல் புகையிலை தடை - அனைத்து மென்பானங்களுக்கும் அபராதம் !


2020ம் ஆண்டளவில் புகையிலை உற்பத்தியை முற்றிலும் தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக நேற்று (11) கொழும்பில் தாதியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சுகாதார அமைச்சர் ராஜித சேணாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

புகையிலை உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பிரிதொரு உற்பத்தியில் ஈடுபட தேவையான நிதியுதவி பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் புகையிலை உற்பத்தி தடை காரணமாக புகையிலை நிறுவனம் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் சேணாரத்ன தெரிவித்துள்ளார். 


இதற்கடையில் இனிப்பு பானங்களில் அடங்கிய சீனியின் அளவை 6 வீதத்தை விட அதிகமாக காணப்படுமாயின் அதிகரிக்கப்படும் ஒவ்வொரு கிராமிற்கும் ஒரு ரூபா விகிதம் அபராதம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்திற் கொண்டு அரசாங்கம் இத்தானத்தை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top