'சிறைக்கைதிகளும் மனிதர்கள்ளே' இன்று வெலிக்கடை முன்பாக  !


சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சிறைக்கைதிகளும் மனிதர்களே' எனும் வேலைத்திட்டம் இன்று (12) நண்பகல் 12.30 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வீதி நாடகம், சிறைக்கைதிகளின் உரிமை குறித்து சிவில் சமூக ஆர்வலர்களினால் கருத்து தெரிவித்தல் மற்றும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமான ஆர்ப்பாட்டம் இவ்வேலைத்திட்டத்தின் எதிர்ப்பார்ப்பாகும். 


அத்துடன் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என கோரி அரசாங்கத்திற்கு கையளிக்கும் பொதுமக்கள் மனுவில் கையெழுத்திடுதலும் இதன் போது இடம்பெறும்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top