இவ்வருடத்தில் தேர்தல் இல்லை !


இவ்வருடத்தில் எந்த தேர்தலையும் நடாத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுடன் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை தெரிவித்துள்ளார்.  


உள்ளுராட்சிசபை தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்திருந்தாலும் தேவையான சட்ட திருத்தம் தொடர்ந்தும் தாமதம் ஏற்படுவதன் காரணமாக தேர்தலை நடாத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


டிசம்பர் மாதத்திற்கு முன் உள்ளுராட்சிசபை தேர்தலை நடாத்த முடியும் என தரப்பு ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தாலும் அது குறித்து இறுதி தீர்மானம் தேர்தல் ஆணைக்குழுவே எடுக்க முடியும். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உட்பட தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகளினால்  உள்ளுராட்சிசபை தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top