லலித் ஜயசிங்கவிற்கு பிணை !


சிவலோகநாதன் வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை தப்பிக் வைக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் செல்ல இன்று (13) ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ரூபா 3 இலட்சம் பிணையிலும் ரூபா 5 இலட்சம் விகிதம் நான் சரீரப் பிணையில் செல்ல ஊர்காவற்றுறை  நீதவான் ஏ.எம்.எம். ரியாஸ் உத்தரவிட்டுள்ளார். லிலத் ஜயசிங்க வெளிநாடு செல்ல தடை விதித்த நீதவான் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை குற்ற விசாரனை திணைக்களத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


2015ம் ஆண்டு இடம்பெற்ற வித்தியா படுகொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் பொலிஸ் காவலில் இருந்து காப்பாற்றி அவருக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்து.
இவ்வழக்கு டிசம்பர் 5ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். editor@lankanewsweb.net

Top