பிரித்தானிய ஊடகவியலாளர் இலங்கையில் முதலை தாக்கி பலி

பிரித்தானிய பைனான்சியல் டைம்ஸ் ஊடவியலாளர் Paul McClean என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரின் வயது 24 ஆகும். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான Paul McClean கழிப்பறை ஒன்றை தேடி சென்று கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் McClean இலங்கைக்கு வந்துள்ளார். நண்பர்கள் குழுவினருடன் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். McClean நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளதுடன், கழிப்பறை ஒன்றை கண்டுபிடிப்பதற்கு அவர் அலைந்து திரிந்துள்ளார். இந்த நிலையில் அவர் முதலையினால் தாக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அருகம்பே பகுதிக்கு அருகில் நேற்று மாலை 3.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நபர் ஒருவர் தீடீரென இழுத்து செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அவரை தேடும் பணிகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து முன்னெடுத்த போதிலும் அவர்களால் அடுத்த நாள் வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த நாள் ஆழமான சேற்று பகுதியில் இருந்தே அவரது உடல் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பைனான்சியல் டைம்ஸ் ஊடக நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மொழியில் முதல் வகுப்பு பட்டம் பெற்ற ஒருவராகும்.

அவர் சமீபத்தில் ப்ரெக்ஸிட் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய செய்திகளை பதிவு செய்துள்ள நிலையில் லண்டனுக்கு திரும்புவதற்கு முன்னர் பிரஸ்ஸல்ஸில் நாட்டில் இரண்டு மாதங்கள் வாழ்ந்து வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. செம்பெயின் தொழில் பற்றிய அவரது சமீபத்திய கட்டுரை கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

“நாங்கள் அனைவரும் முற்றிலும் அதிர்ச்சியடைந்தோம். அவர் ஒரு பெரிய குழந்தை என்றே கூற வேண்டும் அவர் மிகவும் சிறப்பான ஒருவராகும். இது மிகபெரிய சோகமான செய்தியாக உள்ளதென” பைனான்சியல் டைம்ஸ் ஊடகத்தில் அவருடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
McCleanனின், 22 வயதான சகோதரர் நீல் 2014ஆம் ஆண்டு லுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த நோய்க்கு எதிராக இணையத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top