கீத் நொயார் தாக்குதல் சம்பவத்திற்கு கோத்தாபயவிற்கு குற்றச்சாட்டு !


'த நேஷன்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று தாக்குதலுக்குற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நேரடியாக குற்றம் சுமத்துவதற்கா வாய்ப்புகள் நிலவுவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது.


கீத் நொயார் கடத்திச் சென்று சித்திரவதைக்குட்படுத்தியமை தொடர்பில் குற்ற விசாரனை திணைக்களத்தின் விசரனை நடவடிக்கைகள் முடிவடைந்து தற்பொழுது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அதன் அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ஷவ மீது நேரடியாகவே குற்றம் சுமத்த முடியும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றது. 


2008 மே மாதம் 22ம் திகதி தெஹிவளை வைத்திய வீதியில் தனது இலத்தின் அருகில் கீத் நொயார் கடத்தப்பட்டதுடன் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை செய்து விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்த விசாரனைகளி;ல் மரதானை ரிபொலி இராணுவ முகாமிலுள்ள இராணுவத்திரின் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டதுடன் அவ் இராணுவக் குழுவினர் கடந்த காலத்தில் மேலுமொரு ஊடக அடக்குமுறை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்கதக்து.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top