அரச ஊழியர்கள் சிலருக்கு நாளை தொடக்கம் கடமை நேர மாற்றம்

பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களில் நேர மாற்றம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் பிற்பகல் 3.30 முதல் 5.00 மணி வரை பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும் எனவும் அரசாங்க நிர்வாக அமைச்சின் நிறுவனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்.

நிறுவன தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 

பொதுமக்களின் சேவைக்கு தடை ஏற்படாத வகையில் புதிய அலுவலக நேரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவனத் தலைமை அதிகாரிகளால் முடியும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவை தொடர்ந்தும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில்  இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலகவும், குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்ஹவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top