ஒருவாரமாக இடம்பெறும் வடக்கு பொது சுகாதார பரிசோதகர்களின் வேலைநிறுத்தம் !

 ஒருவாரமாக இடம்பெறும் வடக்கு பொது சுகாதார பரிசோதகர்களின் வேலைநிறுத்தம் ! யாழ்ப்பாணத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஐந்து பேருக்கு நியாயமற்ற முறையில் பெற்றுக் கொடுக்கப்பட்ட இடமாற்றம் இதுவரை ரத்து செய்யாத காரணத்தினால் வடக்கில் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (20) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ஐந்து பேருக்கும் மே மாதம் முதல் இடமாற்றம் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன் குறிப்பிட்ட இடமாற்றத்தை நிராகரித்தமையினால் அந்த பொது சுகாதார பரிசோதகர்கள் ஐந்து பேரின் சம்பளம் மே மாதம் முதல் இடைநீக்கம் செய்யப்பட்டடுள்ளதுடன் இதுவரை குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை.

வடமாகாணத்தில் 150 பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதுடன் கடந்த 13ம் திகதி யாழ்ப்பாண டெலிகொம் அருகாமையில் இடம்பெற்ற 200 பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டத்தின் போது குறிப்பிட்ட இடமாற்றத்தை ரத்து செய்து அந்த பொது சுகாதார பரிசோதகர்களின் சம்பள கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.

இருப்பினும் 13ம் திகதி முதல் வடமாகாண பொது சுகாதார பரிசோதகர்களின் வேலைநிறுத்தம் இதுவரை குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை என்பதுடன் குறிப்பிட்ட இடமாற்றம் பெற்றுக் கொடுத்திருப்பது தனக்கு முன் கடமையாற்றிய சுகாதார அமைச்சர் எனவும் இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினை குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடி வடமாகாணசபையில் தீர்மானம் எடுப்பதாக தற்போதைய வடமகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top