நாளை ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் !

மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனபதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (21) ஆசிரியர் ஆசிரியைகள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தில் கண்டி மாவட்ட செயலாளர் எஸ்.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 


கண்டி மாவட்டத்தில் மட்டும் 624 பாடசாலை ஆசிரியர்கள் இதில் பங்குபற்றுவதுடன் அவ் ஆசிரியர்கள் அன்று சேவையில் ஈடுபடமாட்டார்கள் என கண்டி சயிட்டம் எதிர்ப்பு அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளது.


கண்டி மாவட்ட பிரதேசசபை, தேசிய பாடசாலை மட்டுமினிற் அனைத்து ஆசிரியர்கள் ஆசிரியைகள் இதன் போது ஒன்றிணைவதுடன் இதன் காரணமாக பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்த பொறுப்பு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சயிட்டம் தனியார் நிறுவனத்திற்காக முன் நின்றாலும்  அது அவர்களின் அரசியல் இலாபமாகவே கருதுகின்றனர் எனவும் எஸ்.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


21ம் திகதி தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா இடம்பெறுகின்றமையினால் சமய நிகழ்வுகளுக்காக கலந்து கொள்ள வேண்டும். இருப்பினும் அவர்கள் அன்றைய தினம் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.செந்தில் தெரிவித்துள்ளார்.


பேராதெனிய பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஆசிரியர்களின் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் எம்.முதியன்சே, பல் மருத்துவர்களின் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் பிரசன்ன குணசேன, கண்டி மாவட்ட செவிலியர்கள் சங்கத்தின் செயலாளர் பிரபாத் பாலிபான, பேராதெணிய மாணவர்கள் சங்கத்தின் ஆசிரியர் பிரசாத் அதுகோரல போன்றவர்கள் உட்பட பலர் இதன் போது கருத்து தெரிவித்திருந்தனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top