வேலைநிறுத்தத்தால் நோயாளர்கள் பாதிப்பு !


இன்று 21 (21) நடைமுறைப்படுத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக இன்று காலை முதல் திக்ஓயா வைத்தியசாலைக்கு வருகை தரும் தோட்ட நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த வாரம் சிகிச்சைக்காக வருகை தந்திருந்த போது வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாக நோயாளர்கள் தெரிவிப்பதுடன் அவசர சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக திக்ஓயா வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.சயிட்டம் நிறுவனத்தை மூடுதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.  நோயாளர்களின் உரிமையை பாதுகாப்பதற்காகவே தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளதுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் வேலைநிறுத்தத்தில் ஒன்றிணைவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 


ஏவ்வாறாயினும் இந்த வேலைநிறுத்தத்திற்கு தோட்ட ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதுடன் இன்றைய தினம் தோட்டப்புற பாடசாலைகள் வழமைபோல் கல்வி நடவடிக்கை இடம்பெற்றதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

06

05

03

02 1

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top