சுவாசிக்க போதுமான காற்று வராமையே நோர்வூட் ஊழியர்களின் மயக்கத்துக்கு காரணம்

இணைப்பு 2

நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையினுள் சுவாசிப்பதற்கு ஒக்சிஜன் வாயு போதுமானதாக இல்லாமையாலே 235 பெண்  ஊழியர்கள் மயக்கமுற்றதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை தலைமை வைத்திய அதிகாரி திலின பெரேரா தெரிவித்தார்.

நோர்வூட் நிவ்வெளி பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண் ஊழியர்களில் 200 இற்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்தமையினால் நோர்வூட் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது.

மயக்கமுற்றவர்களில் 135 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் 100 பேருக்கு ஆடைத்தொழிற்சாலை வளாகத்திலேயே வைத்திய குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

ஆடைத்தொழிற்சாலை கண்ணாடிகளால் மூடப்பட்டுக் காணப்படுவதாலும் 850 பேர் வரையில் கடமையாற்றும் இடத்தில் சுவாசிப்பதற்கு போதுமான காற்று உள்வராமையாலும் வெப்ப காலநிலையினாலும் இவ்வாறு மயக்கநிலை ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

திடீரென மயக்கமுற்றவர்களை வைத்தியசாலை கொண்டு சென்றபோது  வைத்தியசாலை வளாகத்திற்கும் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கும் நோர்வூட் பிரதேச மக்கள்  படையெடுத்தமையினால்  பதற்ற நிலை தோன்றியது.

சம்பவத்தில் யாருக்கும் உயிராபத்து இல்லை என்றும் சிகிச்சை பெற்று சில வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை நோர்வூட் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

 

இணைப்பு: 1

நோர்வூட் நிவ்வெளி பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண் ஊழியர்களில் 200 மேற்பட்டோர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்தமையினால் நோர்வூட் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இவர்கள் இன்று (04.10.2017) ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது காலை 9.45 மணியளவில் திடீரென மயக்கமுற்றனர்.

மயக்கமுற்ற பெண் ஊழியர்கள் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 800 பேர் வரை வேலை செயதுவருகின்றனர்.

வாயு கசிவினால் அல்லது காலை உணவு ஒவ்வாமையினால் இவ்வாறு திடீர் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிராபத்து இல்லை என்றும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top