மோசமான காலநிலை: 2264 வீடுகள் மண்­ச­ரிவில் புதையும் அபாயம்

தற்போது நிலவும் மோசமான காலநிலையினால் 2264 வீடுகள் மண்சரிவில் பாதிகக்ப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் பட்சத்தில் இந்தநிலைமை பாரதூரமாகும் என கட்டட ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

அடுத்து இரு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மழை வீழச்சி காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை, அதிக மழையினால் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அனர்த்தப் பதிவுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஒருவாரமாக அதிக மழைவீழ்ச்சி நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள நிலையில், நீர்த்தேக்கங்கள் அனைத்திலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால், நிலவளா கங்கை, களணி, கின் கங்கை உள்ளிட்ட பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் கொழும்பு, களனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளத.

இந்த நிலையில், கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை, அதிக மழைவீழ்ச்சியினால் இப்பகுதிகளில் 2264 வீடுகள் மண்சரிவு சிக்கும் அபாயம் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகினால் மண்சரிவுகள், நிலம் கீழ் இரங்கல் உள்ளிட்ட பாரிய அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கட்டட ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை மழையுடன்கூடிய காலநிலையை இருப்பதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் சாத்தியங்கள் இருப்பதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top