நாமல் ராஜபக்‌ஷவிற்கு பிறிதொரு தினம்!

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு தினத்தை வழங்க அம்பாந்தோட்டை பொலிஸார் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (09) முற்பகல் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானார்.

நாளை தமக்கு முக்கிய நிகழ்வில் பங்கேற்க வேண்டியுள்ளதன் காரணமாக பிறிதொரு தினத்தில் வாக்கு மூலம் அளிக்க தாம் வருவதற்கு அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஜ உட்பட மூவருக்கு நாளைய தினம் பொலிஸில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை காரணமாக டீ.வி.சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top