பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100 கொடுப்பனவு

அடுத்த ஆண்டு முதல் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய நடைமுறை ஒன்றை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நூறு ரூபா சிறப்புக் கொடுப்பனவு வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த உத்தேசிப்பதாகவும், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

இத்திட்டம் தொடர்பிலான யோசனையை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், கல்வி அமைச்சின் இந்த புதிய யோசனைக்கு இலங்கை ஆசிரிய சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது பற்றி பேசிய ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மாணவர் வரவினை அதிகரிக்க எடுத்திருக்கும் புதிய யோசனை அவசியமற்றது எனவும், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலை உத்தேசித்தே இந்த நடைமுறை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலேயே அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top