சுஸில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் ஆனந்தபுரம் வீட்டில் சுவிஸ் நாட்டுப் பிரதிநிதிகள்!

சுவிசர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு சுவிஸ் நாட்டு தூதுவர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இன்று பிற்பகல் அங்கு சென்ற பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளதுடன் துயர்பகிர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது சுவிஸ் நாட்டு தூதுவர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,
சுவிசர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தொடர்பில் இதுவரையில் இலங்கை சுவிஸ் தூதரத்திற்கு மேலதிக விடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒழுங்கான முறையில் நடைபெறும் என உறுதியளித்துள்ளார்கள்.

தந்தையை, சகோதரனை, கணவனை இழந்து தவிக்கும் உங்களின் வலிகளை புரிந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top