நாமல் 16ஆம் திகதி உள்ளே; டயர்களை எரித்து எதிர்ப்பு வெளியிட்ட ஆதரவாளர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆறு பேர் நேற்று (10) கைதுசெய்யப்பட்டனர்.

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினரை விளக்கமறியலுக்கு அழைத்துச் சென்ற பேருந்து தங்காலைக்குச் செல்ல முடியாதவாறு சிலர் இடையூறு செய்துள்ளதாக தெரியவருகிறது.

அம்பாந்தோட்டை பாலத்திற்கு நடுவில் டயர் கொளுத்தி பேருந்தை செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ ஈடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடைகளை அகற்றி பேருந்தை செல்ல வழி அமைத்துக் கொடுத்துள்ளனர்.

அம்பாந்தோட்டை பாலத்திற்குச் சென்ற வீதியில் கிடந்த டயரை அப்புறப்படுத்திவிட்டு பேருந்து செல்வதற்கு இடமேற்படுத்தி கொடுத்துள்ளனர்.

பேருந்து அவ்விடத்தை விட்டு சென்று பின்னர் விசேட அதிரடிப்படையினர் எரிந்து கொண்டிருந்த டயரை அணைத்துள்ளனர்.

அத்துடன், பிரதேச பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top