ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு! 10 நிமிடத்தில் வெளியேறிய மலிக்!

அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகினர்.

வாக்குமூலம் வழங்கச் சென்ற மலிக் சமரவிக்ரம அங்கிருந்து 10 நிமிடத்தில் வெளியேறியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் ஆணைக்குழுவில் ஆஜராகினர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top