நிதி கொள்ளைக்கும் நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை! லிட்ரோ நிறுவனம் அறிக்கை!

லிட்ரோ லங்கா கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் நிறுவனத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென அந்த நிறுவனம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

தாய்வானின் பிரபல வங்கியொன்றின் இணையக் கட்டமைப்பை ஊடறுத்து பாரிய நிதியைக் கொள்ளையிட்ட சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதனுடன் தொடர்புபட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சிலர் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் லிட்ரோ லங்கா கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டிற்கும், நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என லிட்ரோ லங்கா கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் சட்ட ஒழுங்கு விதிகளின் படி  லிட்ரோ லங்கா நிறுவனம், செயல்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் திரைசேறிக்கு 8.43 பில்லியன் ரூபா நிதி பங்களிப்புச் செய்துள்ளதாகவும், இலங்கை பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளதாகவும் அந்த மேலும் தெரிவித்துள்ளது.

சட்ட ஒழுங்க விதிகளுடன் தமது வர்த்தகப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top