நெடுங்கேணி பாடசாலையொன்றில் மிதிவெடி மீட்பு!

வவுனியா வடக்கு நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் வகுப்பறைக்கு முன்பாகவே இந்த மிதிவெடி நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிறிதொரு வகுப்பறை திருத்த வேலைக்காக மண்ணை அகழ்ந்த போதே மிதிவெடி போன்ற ஒரு பொருள் இருப்பதை அவதானித்த பாடசாலை அதிபர், உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், பாடசாலைக்குச் சென்ற பொலிசார், மிதிவெடியை பார்த்த பின்னர், மாணவர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

உடனடியாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் மிதிவெடியை செயலிழக்கவைக்கவுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

landmine 02

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top