விமானப்பயணத்தில் நடுவானில் மரணித்த தமிழர்!

குவைட்டில் இருந்து இந்தியா செல்லும் வழியில் இலங்கை வந்திருந்த நபர் ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

குவைட்டில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 52 வயதான மூத்தன் முருகன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருடைய விசாக் காலம் முடிவடைந்ததையடுத்து தமிழகம் செல்லவிருந்த நிலையில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான யு.எல்.230 விமானத்தில் புறப்பட்டர்.

இவரது உயிர், இன்று (10) காலை ஆறரை மணியளவில், கட்டுநாயக்கவில் தரையிறங்க முன்னரே பிரிந்தது.

விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top