தாய்லாந்து வங்கி பண மோசடி! புதிய சிக்கலில் ரவி!

தாய்வான் வங்கியின் பல கோடி ரூபா பண மோசடியில் கைதாகியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனத் தலைவர் சலீல முனசிங்கவிற்கு பின்னால் பிரபல அரசியல்யொவருவர் இருந்துள்ளதாகவும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவாக இருக்கலாம் எனவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கிலுள்ள சிற்றி வங்கியின் தலைமையகத்தின் கணனி வலையமைப்புக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி தாய்வான் வங்கியொன்றிலிருந்து பணத்தை கொள்ளையிட்டு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் லிற்றோ எரிவாயு நிறுவனத் தலைவர் கைதாகியுள்ளயுள்ளார். இதுதொடர்பாக பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று (10) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சிக் காலத்தில் இங்குள்ள வங்கிகளில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் வெளிநாட்டு வங்கிககளில் வைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன. அதேபோன்று இந்த ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு வங்கிகளில் கொள்ளையடிக்கப்ப்ட பணம் இங்குள்ள வங்கிகளில் வைப்பிலிடப்படுகிறது. இதன்படி இரண்டுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடியொன்று தொடர்பாக கைதாகியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், ரவி கருணாநாயக்க எம்.பிக்கு நெருக்கமானவரே.

இவரை அந்தப் பதவிக்கு நியமிக்க உத்தரவிட்டவர் யார், இந்நிலையில் யாருடைய தேவைக்காக அவர் இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதில் எமக்கு சந்தேகம் உள்ளது. சாதாரணமாக இலங்கையிலுள்ள ஏதேனும் வங்கியில் 10 லட்சம் ரூபாவை வைப்பிலிடச் சென்றாலோ அல்லது அந்தத் தொகை வெளியில் எடுக்கும் போதே அது தொடர்பாக வங்கி கேள்விகளைக் கேட்கிறது. இந்த நிலையில் இந்தளவு பணத்தை இலங்கையிலுள்ள வங்கியொன்றின் ஊடாக வெளியில் எடுப்பதற்கு உத்தரவிட்டவர் யார்? இந்தக் கொடுக்கல் வாங்கலுடன் லிற்றோ எரிவாறு நிறுவனத் தலைவரே தொடர்புபட்டுள்ளார். இவ்வாறானவரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை, இந்தக் கொடுக்கல், வாங்கல் விடயமானது லிற்றோ எரிவாயு நிறுவனத் தலைவர் மாத்திரம் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இதனால் இது தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்வதேச சந்தைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

லிற்றோ நிறுவனத் தலைவர் பிரபல அரசியல் முக்கியஸ்தருடன் உரையாடியதற்கான தொலைபேசி ஒலிப்பதிவுகள் எங்களிடம் இல்லை. ஆனால், இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்கள் போதுமானதாக இருக்கின்றன. மேற்படி நிறுவனத் தலைவர், ரவி கருணாநாயக்கவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னால் இருக்கும் அந்த பிரபலமானவர் அரசியல்வாதியாக இருப்பாராயிருந்தால் அது ரவி கருணாநாயக்ககவாகவே இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top