2023இல் சேரி இல்லாத நகரமாக கொழும்பு

2023ஆம் ஆண்டு சேரி இல்லாத நகரமாக கொழும்பு மாற்றம் பெறும் என அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உலகில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கொழும்பு நகர் மாற்றமடையும். இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை தயாரித்துள்ளது.

கொழும்பு நகரில் பல முன்னணி பாடசாலைகள் இருக்கின்றனர். எனினும், ஏராளமான சிறுவர்களுக்கு இந்த பாடசாலைகளில் பயிலும் சந்தர்ப்பம் கிடைக்காதிருக்கிறது.

கொழும்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரை உலகின் மிகப் பெரிய பொருளாதார மையமாக உருவாக்குவது எமது திட்டம். துறைமுக நகரம் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top