தந்தைக் கொன்றதற்காக பிரபாகரனின் சடலத்தைப் பார்த்து மகிழ்ச்சியடையமுடியவில்லை: ராகுல் காந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எமது தந்தையைக் கொன்றார் என்பதற்காக அவர் இலங்கையில் கடற்கரையில் இறந்துகிடந்ததைப் பார்த்து ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை என இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 கடைசி மகன் பாலச்சந்திரனது வாழ்க்கையைப் போன்றே எங்களது வாழ்க்கையும் அமைந்திருப்பதாகவும் பாலச்சந்திரனது வாழ்க்கை எவ்வளவு போராட்டகரமாக இருந்ததோ அப்படித்தான் எங்களுடைய வாழ்க்கையும் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

குஜராத் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றுகையில், ''நீங்கள் எங்கள் அப்பாவை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. எங்கள் அப்பாவை விடுதலைப் புலிகளின் தலைவர் கொலை செய்தார்.

தந்தையை இழந்த துயரத்தில் நாங்கள் வளர்ந்தோம். என்னுடைய தந்தையை கொன்றவர் இலங்கையில் கடற்கரையில் இறந்துகிடந்தார். அதைப் பார்த்து நாங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top