கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பெரும் பதற்றம்!

கொழும்பிலிருந்து புறப்படுகின்ற அனைத்து ரயில் பயணங்களும் திடீரென இரத்து செய்யப்பட்டதால் புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்தில் பெரும் அமளி ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ரயில்வே திணைக்களத்திலுள்ள ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில் ரயில் பயணங்கள் தற்சயமத்திலிருந்தே இரத்து செய்யப்பட்டிருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.

குறுந்தூர மற்றும் தூர இடங்களுக்குச் செல்கின்ற பயணிகள் தற்போது ரயில் நிலையத்தில் குழுமியிருப்பதோடு அதிகாரிகளுடன் பேசிவருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top