இ.போ.சவிற்கு ICO எரிபொருள் நிரப்ப அனுமதி கோரி அமைச்சரவையில் பத்திரம்!

இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் (ICO) இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி கோரிய பத்திரமொன்று போக்குவரத்து அமைச்சரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்திரத்தை உடனடியாக நிராகரிக்குமாறு அகில இலங்கை போக்குவரத்துச் சேவை சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. இந்த அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்படாவிடின் இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பயனற்றதாகிவிடும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2016 மற்றும் 2017 ஆண்டுகளுக்கான வரவு செலவு யோசனைத் திட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் ஒரு டிப்போவைத் தேர்ந்தெடுத்து எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை அமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென இந்தச் சங்கம் கோரிக்கை முன்வைத்திருந்தது.

பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்புவதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும் எனவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், IOC நிறுவனத்திடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யும் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டடால் இலங்கை போக்குவரத்துச் சபை மாத்திரமன்றி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நட்டத்தை எதிர்கொள்ளும் எனவும் அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top