தீவிரவாதிகள் என்ற பெயரில் இனிமேல் தடுத்துவைத்திருக்க முடியாது: அமைச்சரவைப் பேச்சாளர்

தீவிரவாதிகள் என்ற பெயரில் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்துரைத்த அமைச்சர்,
''சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களைத் தவிர்த்த ஏனையோர் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களை பொய்க்கு தடுத்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை. கடந்த காலத்தைப் பார்த்தால் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் எவ்வித பாதிப்பும் அரிதில் ஏற்படவில்லை. சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிடின் அவர்களை விடுவிக்க வேண்டும் அல்லவா? தீவிரவாதிகள் என்று கூறிக்கொண்டு எவ்வளவு காலத்திற்கு இவர்களை இப்படியே வைத்திருப்பது? தற்போது கலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த கலகம் முடிவுக்கு வந்து 8 வருடங்கள் கடந்துவிட்டன. என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் வடக்கில் 62 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
''வடக்கில் இராணுவம் வசமிருந்த 62 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பகுதியை விடுவிக்கும் பணியே இருக்கிறது. இதுகுறித்துதான் பாதுகாப்புத் தரப்பினரும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இராணுவம் வசமிருக்கும் இடங்களுக்கு பதிலீடாக வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டு அவை குறித்த தரப்பிற்கு வழங்கப்படும். இதுவே தற்போதுள்ள நிலைப்பாடு. என்று கூறினார்''

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top