கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை நாவற்குழியுடன் நிறுத்தம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய புகையிரத சேவைகள் யாவும் அடுத்த வாரம் நாவற்குழிவரை மட்டுமே நடைபெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் - நாவற்குழி இடையிலான புகையிரதப் பாதையில் உள்ள நாவற்குழி பாலம் புனரமைக்கப்படவுள்ளதாலேயே புகையிரத சேவை நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளன. இந்தப் புனரமைப்பு பணிகள் வரும் 23 - 27 ஆம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன.

புனரமைப்புப் பணிகள் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பயணிகள் விசேட பேருந்து மூலம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து புகையிரதத்தில் அவர்களது பயணத்தை தொடர ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனினும் யாழ்.புகையிரத நிலையத்தில் தரித்து நிற்கும் ரயில் மூலம் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான புகையிரத சேவைகள் வழமையான கால அட்டவணைக்கு ஏற்ப நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக தகவல்களைப் பெற 021-2222271 என்ற இலக்கத்தில் யாழ்.புகையிரத நிலையத்தை தொடர்புகொள்ளலாம்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top