புதையல் வேட்டை - ஒன்பது பேர் கைது

ஹபரணை, பலுகஸ்வெவ பகுதியில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹபரணை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரில் நடந்த தேடுதலில் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் வசமிருந்த மண்ணகழ்வு உபகரணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹபரணை, தம்புள்ளை, கந்தளாய், இனமலுவ பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ஒன்பது பேரும் இன்று (12) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top