அரசியல் கைதிகள் பற்றி சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார்.

தங்களுடைய வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திலிருந்து மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு சட்டமாதிபர் திணைக்களம் மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மூன்று அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் தொடர்பிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு இந்தக் கடிதத்தை அனுப்புகிறார்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top