வெறிச்சோடிய ரயில் நிலையங்கள்! பயணிகள் பெரும் அசௌகரியம்!!

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் பல்லாயிரக் கணக்கான பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (11) நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்தில் நேற்றிரவு பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. ஆயிரக் கணக்கான பயணிகள் பெரும் அசௌரிகயங்களை எதிர்கொண்டனர்.

குழந்தைகள், வயோதிபர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வீடு திரும்ப முடியாது திணறிவந்தனர்.

விசேட பேருந்து சேவைகளை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஏற்பாடு செய்திருந்தாலும், மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

ஆத்திரமடைந்த மக்கள் ஆவேசமாக நடந்துகொண்டனர். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பின்னரவு வரை இந்த நிலை தொடர்ந்திருந்து. இந்த நிலையில், இன்று காலை முதல் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ரயில்களில் தமது அன்றாட போக்குவரத்தை மேற்கொள்ளும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top