யாழில் இன்றும் வாள்வெட்டு அட்டகாசம்! இரு இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில், இதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் வாள்வெட்டுத் தாக்குதல் பதிவாகியுள்ளது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top