நல்லிணக்கம் குறித்து அமெரிக்கத் தூதுவருடன் அமைச்சர் ராஜித்த விசேட சந்திப்பு!

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கும், அமெரிக்காவின் இலங்கை, மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் அதுல் கேசாப்பிற்கும் இடையே விசேட சந்திப்பொன்று நடந்துள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தில் நேற்றிரவு இந்தச் சந்தப்பு நடந்தது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன்மூலம் சுகாதாரமான, மகிழ்ச்சியான, ஜனநாயகமான இலங்கையில் எவ்வகையில் கட்டியெழுப்ப முடியும் என்பது குறித்து இந்தச் சந்திப்பு கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பின் பின்னர் டுவிட்டர் பதிவொன்றைச் செய்துள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், ''இலங்கை நல்லிணக்கம் குறித்து மிகச்சிறந்த கலந்துரையாடல்'' ஒன்று நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, இயல்புவாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தற்போத விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

யுத்தத்தினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் சிகிச்சைப் பெறுவதற்காக மாங்குளம் பிரதேசத்தில் விசேட வைத்தியசாலையொன்றையும் நிறுவியுள்ளார். அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சுமார் 30 வைத்தியசாலைகளை அமைப்பதற்கான ஆரம்ப பணிகளை சுகாதார அமைச்சர் மேற்கொண்டுவருகிறார்.

அமெரிக்காவின் இலங்கை, மாலைத்தீவிற்கான தூதுவராக அதுல் கேசாப், அமெரிக்க அரச நிர்வாக சேவையின் உயர் நிலை அதிகாரியாக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நயிமிக்கப்பட்டிருந்தார். 2010 - 2012 ஆண்டு காலப்பகுதியில் தென், மத்திய ஆசிய வலயம் குறித்த அரச திணைக்களப் பிரிவின் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருந்தார். 2013 - 2015 ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் நீஷா பீஷ்வால் உடன் நெருக்கமாக பணியாற்றியிருந்தார். இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளுக்கான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுத்த அதிகாரி என்ற வகையில் அதுல் கெஷஹீப் குறிப்பிடப்படுகிறார்.

அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாபுடன் சுகாதார அமைச்சர் நடத்திய நல்லிணக்கம் குறித்த சந்திப்பு இந்த வகையில் மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top