ரயில்வே தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்தது

ரயில் சாரதிகள், காப்பாளர்களால் முன்னெடுத்துவந்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதி செயலாளருடன் சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்தே ஜனாதிபதி செயலாளருடன் இந்த சந்திப்பு நடைபெற்றது.

முன்னதாக ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு தீர்மானித்திருந்த நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பை மேற்கொள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் வாய்ப்பை கோரியிருந்தன.

எனினும், இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் அடிப்படையில் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிடுவதாக ரயில்வே தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top