இளைஞரை தாக்கிய உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்

கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலின்போது இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

Share this article

Additional Info

இந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]

Top